இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: 2 இந்திய வீரர்களுக்கு ஓய்வு
- இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
- ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.