கிரிக்கெட்

இது அதுல.. டெல்லி ஸ்டைலில் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய ஆர்சிபி அணி

Published On 2024-03-19 14:22 GMT   |   Update On 2024-03-19 14:22 GMT
  • நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகிற 22-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது.
  • இதில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகிறது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.

இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்சியை பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. விராட் கோலி அந்த ஜெர்சியுடன் இருப்பது போன்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஜெர்சியை பார்த்த நெட்டிசன்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஜெர்சி போல உள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சொல்வது போல ஆர்சிபி அணியின் ஜெர்சி டெல்லி அணியின் ஜெர்சி போலதான் உள்ளது. மேலும் சிலர் சைரனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தனர்.

 

Tags:    

Similar News