கிரிக்கெட் (Cricket)

ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி ஜெயிக்காததற்கு நான்தான் காரணம்- ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வாட்சன்

Published On 2024-05-21 12:25 GMT   |   Update On 2024-05-21 12:25 GMT
  • 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.
  • 2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் தோல்வி அடைந்தற்காக பெங்களூரு ரசிகர்களிடம் முன்னாள் ராயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வீரர் ஷேன் வாட்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

2016 மற்றும் 2017 ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிக்காக ஷேன் வாட்சன் விளையாடினார்.

2016 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய பெங்களூரு அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை பெங்களூரு எதிர் கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 208 ரன்கள் குவித்தது. 208 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

அப்போட்டியில் 4 ஓவர் பந்துவீசிய வாட்சன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 61 ரன்கள் விட்டு கொடுத்தார். பேட்டிங்கிலும் 9 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இந்த தோல்வி குறித்து பேசிய வாட்சன், "2016 ஐபிஎல் இறுதிப்போட்டியில் தோற்றதற்காக பெங்களூரு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் முடிந்தளவிற்கு நன்றாக தயாராகியிருந்தேன். அது எனது சிறப்பான ஆட்டமாக இருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால், அதுவே எனது மிக மோசமான ஆட்டமாக அமைந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய வாட்சன் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News