கிரிக்கெட் (Cricket)

நிதானமாக ஆடிய தவான், ராகுல் ஜோடி

ஷுப்மான் கில் அசத்தல் சதம் - ஜிம்பாப்வே வெற்றிபெற 290 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2022-08-22 10:55 GMT   |   Update On 2022-08-22 10:55 GMT
  • முதலில் ஆடிய இந்தியா 289 ரன்களை எடுத்துள்ளது.
  • ஷுப்மான் கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார்.

ஹராரே:

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹராரேவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

அடுத்து இறங்கிய ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடினார். அவர் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் அரை சதமடித்து 50 ரன்னில் அவுட்டானார்.

நிதானமாக ஆடிய ஷுப்மான் கில் 82 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சர்வதேச போட்டிகளில் ஷுப்மான் கில்லின் முதல் சதம் இதுவாகும்.

அவர் 130 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

ஜிம்பாப்வே அணி சார்பில் பிராட் எவான்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

Tags:    

Similar News