ஆன்மிக களஞ்சியம்
இந்திரன் பூஜை செய்யும் திருக்கழுக்குன்றம் இடிமுழக்கு
- இத்தலத்து மலையில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீசுவரர் மீது 12 ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை இடிவிழும்.
- லிங்கத்தின் மீது விழுந்தும், லிங்கத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதில்லை.
பிரம்மனும், விஷ்ணுவும் இத்தலத்தில் இறைவனை பூஜைகள் செய்து வழிபட்டதற்கு சான்றாகவே இத்தலத்து கோவில் கருவறையில் பிரம்மன், விஷ்ணு முதலியோர் திருவுருவங்களும் காட்சி தருகின்றன.
இத்தலத்து மலையில் எழுந்தருளியிருக்கும் வேதகிரீசுவரர் மீது 12 ஆண்டுக்கு ஒருமுறை இயற்கை இடிவிழும்.
லிங்கத்தின் மீது விழுந்தும், லிங்கத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படுவதில்லை. இதனை 'இடிமுழக்கு' என்று சொல்கிறார்கள். அதாவது இந்திரன் பூசை செய்வதாக ஐதீகம்.
வேதங்களே இத்தலத்தில் மலைவடிவமாக விளங்குவதால் நாயன்மார்கள் மூவரும் மலை மீது ஏறி செல்லவில்லை. மலையடி வாரத்திலிருந்தே இறைவனைப் போற்றி பதிகங்கள் பாடிச் சென்றுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் நின்று பதிகம் பாடிய இடம் இப்போது 'மூவர்பேட்டை' என்று வழங்கப்படுகின்றது.
இங்கு மூவர் திருவுருவங்களும் அமைந்த திருக்கோவில் உள்ளது.