ஆன்மிக களஞ்சியம்

சீரடி மண்ணை மிதித்தவர்களின் கஷ்டங்கள் விலகுகின்றது!

Published On 2024-09-18 10:15 GMT   |   Update On 2024-09-18 10:15 GMT
  • துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது.
  • அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது.

துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது.

அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது.

பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார்.

அவர் 1918&ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18&ம் நான் தன் ஸ்தூல உடலை பிரிந்தார்.

உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.

அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்கள் நீங்கப் பெற்றவர்களுக்கும் சீரடிபாபாவை வழிபடும் பேறு கிடைக்கிறது.

உலகம் முழுவதும் இருந்து மக்கள் கூட்டம் சாயிபாபா இருக்கும் இடம் நோக்கி வருகிறார்கள்.

சீரடி மண்ணை மிதித்தவர்களின் கஷ்டங்கள் விலகுகிறது.

அவர்களது மனக்கவலைகள் மறைகின்றன.

அவர்கள் குடும்பங்களில் மகிழ்ச்சி பெருகுகிறது. ஆனந்தம் பொங்குகிறது. இன்றும் லட்சோப லட்சம் குடும்பங்களில் சீரடி பாபா ஆனந்தத்தை பொங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

Similar News