ஆன்மிக களஞ்சியம்

தோரணமலை பெயர் வந்தது எப்படி?

Published On 2024-12-04 12:12 GMT   |   Update On 2024-12-04 12:12 GMT
  • மலையில் உச்சிப்பகுதியை அலங்கரிக்கும் பெரிய பாறை ஒரு யானை படுத்திருப்பது போல காட்சி அளிக்கும்.
  • இதனால் இதனை யானை மலை என்று அழைப்பார்கள்.

எழில் கொஞ்சும் இயற்கைகளை தன்னகத்தே கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பொதிகை மலை உள்ளது.

அதற்கு வடக்கே, பொங்கி விழும் அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலம்.

இவை இரண்டுக்கும் நடுவே அமந்துள்ளது தான் தோரணமலை.

மலையில் உச்சிப்பகுதியை அலங்கரிக்கும் பெரிய பாறை ஒரு யானை படுத்திருப்பது போல காட்சி அளிக்கும்.

இதனால் இதனை யானை மலை என்று அழைப்பார்கள்.

யானைக்கு வாரணம் என்றும் பெயர் உண்டு. எனவே இதனை வாரணமலை என்று அழைத்தனர்.

அதுவே தோரணமலை என்று மறுவி அழைக்கப்படுகிறது.

மேலும் இந்த மலையில் சுனைகளும், மூலிகைகளும் தோரணங்களாக விளங்கு அழகு சேர்க்கின்றன.

அந்த வகையிலும் தோரணமலை என்ற பெயர் மிக பொருத்தமாக அமைந்துள்ளது.

Similar News