ஆன்மிகம்
பஞ்ச பூதங்கள்

பஞ்ச பூத மந்திரங்கள்

Published On 2020-02-13 07:09 GMT   |   Update On 2020-02-13 07:09 GMT
பீஜ மந்திரங்களுக்கு உதாரணமாக, சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ள, பஞ்ச பூதங்களுக்கு உரியவற்றை இங்கே பார்க்கலாம். அவை, குறிப்பிட்ட வடிவம் மற்றும் நிறம் ஆகிய தன்மைகள் கொண்டவை.
பீஜ மந்திரங்களுக்கு உதாரணமாக, சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ள, பஞ்ச பூதங்களுக்கு உரியவற்றை இங்கே பார்க்கலாம். அவை, குறிப்பிட்ட வடிவம் மற்றும் நிறம் ஆகிய தன்மைகள் கொண்டவை.

நிலம் - இதற்குரிய பீஜம் ‘லம்’ ஆகும். இது சதுர வடிவமாகவும், பொன் மஞ்சள் நிறத்தையும் கொண்டது.

நீர் - இதற்குரிய பீஜம் ‘வம்’ ஆகும். இது பிறை சந்திரனின் வடிவம் கொண்டது. இதன் நிறம் வெள்ளியின் வண்ணம் ஆகும்.

நெருப்பு - இதன் பீஜம் ‘ரம்’ என்பதாகும். நெருப்பை குறிக்கும் இதன் வடிவம் முக்கோணம் ஆகும். சிவந்த நிறம் கொண்டது.

காற்று - காற்றுக்கான பீஜம் ‘யம்’ ஆகும். இது அறுகோண வடிவம் கொண்டது. நீலம் மற்றும் கருமை நிறத்தைப் பெற்றிருக்கும்.

ஆகாயம் - ஆகாயத்தை குறிக்கும் பீஜம் ‘ஹம்’ ஆகும். இது வட்ட வடிவம் உடையது. கத்தரிப்பூவின் ஊதா நிறம் கொண்டது.

Similar News