ஆன்மிகம்
அரச மர வழிபாடு

அரசமரத்தை ஆண்கள் சுற்றலாமா?

Published On 2020-05-18 06:32 GMT   |   Update On 2020-05-18 06:32 GMT
அரசமரத்தைப் பற்றி பிரம்மா, நாரதருக்கு உபதேசித்த விஷயங்கள் பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளன. அரச மரத்தை ஆண்கள் சுற்றலாமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
அரசமரத்தைப் பற்றி பிரம்மா, நாரதருக்கு உபதேசித்த விஷயங்கள் பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளன. அரசமரத்தின் தெற்குபக்க கிளையில் ருத்ரனும், மேற்கு கிளையில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் வாசம் புரிகின்றனர்.

அதனால், அரசமரத்தை வலம் வந்தால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியம் உண்டாகும். தசரதர் சனீஸ்வரர் மீது பாடிய சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமையன்று அரசமரத்தடியில் அமர்ந்து படிப்போருக்கு சனிதோஷம் நீங்கும்.

குழந்தைவரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை வலம் வருவது வழக்கமே! பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் காலையில் சுற்றலாம். சூரியன் மறைந்த பின் அரசமரத்தைச் சுற்றக்கூடாது. அரசமர வழிபாட்டிற்கு திங்கள், சனிக்கிழமை மிகவும் உகந்தவை.

Similar News