ஆன்மிகம்
அம்மன்

ஆடி மாதத்தில் வரும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள்

Published On 2021-07-30 09:09 GMT   |   Update On 2021-07-30 09:09 GMT
ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
* ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும். இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.

* ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

* ஆடி மாதத்தில்தான், ‘ஆடித் தபசு’ கொண்டாடப்படும். ‘அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

* ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும்.

* ஆடி பவுர்ணமி தினத்தன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

Similar News