- கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை.
- மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.
கர்நாடகத்தின் முக்கியமான இடங்களில் ஒன்று, பாதாமி குகை. இதன் பழங்காலப் பெயர் வதாபி என்பதாகும். இது ஆரம்ப கால சாளுக்கிய வம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.
சாளுக்கியர்கள் 6-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை, கர்நாடகாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தவர்கள். இவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான மந்திர்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பாதாமி சாளுக்கியர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு மந்திர்கள், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் முடிமாணிக்யம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த கோவில்கள், இந்து வம்ச வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. அவை அந்த காலத்தின் பொதுவான கட்டிடக்கலை பாணிகளின் கலவையை வெளிப்படுத்துகின்றன.
கோவில்களில் ஒன்றில், கருவறைக்குள் ஒரு சிவலிங்கத்தின் அடித்தளமாக செயல்படும் ஒரு பாணவட்டத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு கோவிலில் விஷ்ணு சிலையை மீட்டெடுத்துள்ளனர்.
இங்கு நின்ற கோல நரசிம்மர், திரிவிக்ரமன், வாராகர் என்று விஷ்ணுவின் பல்வேறு உருவங்கள் அழகுற அமைக்கப்பட்டிருந்தாலும், சுருண்ட பாம்பின் மீது அமர்ந்த நிலையில் காலை தொங்கவிடாமல், குத்துக்காலிட்டது போல் தூக்கி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் சிற்பம் காண்பவர்களை மயக்குவதாக இருக்கிறது.