வழிபாடு
திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 11-ந் தேதி நடக்கிறது
- திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும்.
- ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி வருகிற 11-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக காலை 6 மணிக்கு தொடங்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். திருமஞ்சன நிகழ்ச்சி முடிந்ததும் சுவாமி மூலவிரட்டுக்கான பூஜை நிகழ்ச்சிகளை கோவில் அர்ச்சகர்கள் செய்வார்கள்.
அதன்பின், பகல் 12 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.