பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
- 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள். கடந்த 23-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பிரதோஷம் மற்றும் தை பவுர்ணமி, தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதி காலை 2 மணி முதல் சென்னை, கோவை, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு தொலை தூர ஊர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.
இதையடுத்து இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறை வழுக்கல் அருவியில் ஆனந்த குளியலிட்டனர்.
இன்று தை பௌர்ணமி தைப்பூசத்தையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந் ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.