வழிபாடு

வட மாநிலங்களில் துர்க்கா பூஜை

Published On 2023-10-17 08:15 GMT   |   Update On 2023-10-17 08:15 GMT
  • பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
  • நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.

மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.

விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.

இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

Tags:    

Similar News