வழிபாடு

வெளிநாட்டு பயணிகள் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபாடு

Published On 2024-03-17 06:45 GMT   |   Update On 2024-03-17 06:45 GMT
  • மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார்.
  • பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

நாகர்கோவில் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கோயிலின் பெயரிலேயே ஊர் நாகர்கோவில் என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில் ஆகும். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்பு சிலைகள் உள்ளன. பொதுமக்கள் இந்த சிலைகளுக்குப் பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.

இக்கோவிலின் கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது வேறு எந்தக் கோவிலிலும் பார்க்கமுடியாத சிறப்பு அம்சமாகும். அது மட்டுமல்ல இந்தக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படுகிறது.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாகர் சிலைக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

Tags:    

Similar News