வழிபாடு

திருப்பதியில் `பகல் பத்து-இரவு பத்து' உற்சவம் தொடங்கியது

Published On 2023-12-13 04:14 GMT   |   Update On 2023-12-13 04:14 GMT
  • நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
  • வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும்.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் 25 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் மிக நீண்ட விழாவான ஆத்யாயன உற்சவம் நேற்று மாலை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தொடங்கியது. இந்த காலத்தில் திருமலை ஜீயங்கார்களால் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.

இந்த பாராயணம் வழக்கமாக தனுர் மாசத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும். அதில் முதல் 11 நாட்கள் `பகல்பத்து' என்றும் மீதமுள்ள 10 நாட்கள் `இரவு பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 22-ந்தேதி கண்ணிநுண் சிறுதாம்பு, 23-ந்தேதி ராமானுஜ நூற்றந்தாதி, 24-ந்தேதி வராகசாமி சாத்துமுறை, 25-ந்தேதி ஆத்யாயன உற்சவத்துடன் நிறைவடைகிறது.

Tags:    

Similar News