வழிபாடு


யானை மீது சந்தனகுடம் ஊர்வலமாக எடுத்து வந்ததையும், பக்தர்களின் கூட்டத்தையும் படத்தில் காணலாம்.


மண்டைக்காடு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது

Published On 2023-03-13 09:09 GMT   |   Update On 2023-03-13 09:09 GMT
  • இன்று பெரிய சக்கர தீவட்டி வீதி உலா நடக்கிறது.
  • அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் நடந்தது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், நண்பகல் 12.30 மணிக்கு நடுவூர்க்கரை சிவசக்தி கோவில் பக்தர்கள் மாவிளக்கு பவனி வருதல், 1 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே மண்டைக்காட்டில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகத்திலும், சுற்றியுள்ள தோப்புகளிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில், களியக்காவிளை, மார்த்தாண்டம், தக்கலை, குமாரகோவில், குலசேகரம் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கோவில் வளாகம், பொங்கலிடும் பகுதி, கடற்கரை, கடற்கரை சந்திப்பு ஆகிய பகுதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா நடந்தது. 6.15 மணிக்கு செம்பொன்விளை சிராயன்விளை பக்தர்களின் சந்தனகுடம் பவனி மண்டைக்காடு கோவிலை வந்தடைந்து. இரவு 7 மணிக்கு சிறப்பு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடந்தது.

ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் காலை 6 மணிக்கு லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரதாமம், 8 மணிக்கு சொற்பொழிவு போட்டி, மாலை 3.30 மணிக்கு பக்தி இன்னிசை, 5 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு அகில திரட்டு விளக்கவுரை, 9 மணிக்கு அய்யாவழி நிகழ்ச்சி, 10.30 மணிக்கு பக்தி இன்னிசை சொற்பொழிவு, 10.30 மணிக்கு புராண நாட்டிய நாடகம் போன்றவை நடந்தது.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி வீதி உலாவும் நடக்கிறது. விழாவின் 10-வது நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடி யந்திர பூஜை, காலை 6 மணிக்கு குத்தி யோட்டம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் கோவிலுக்கு கொண்டு வருதல், 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது.

Tags:    

Similar News