கடலூரில் விடிய விடிய நடைபெற்ற மாசிமக தெப்ப உற்சவம்
- மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம்.
- உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.
கடலூர்:
மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு கடலூா் முது நகா் மீன்பிடி துறை முகத்தில் இரவு நேர மாசிமக தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடை பெறுவது வழக்கம். இதில், மீனவா் கிராமங்களில் பல்வேறு கோவில்களில் இருந்தும் உற்சவா்கள் சிறப்பு அலங்காரத்தில் படகுகளில் காட்சியளிப்பா்.
மின்விளக் குகள், பூக்களால் படகுகள் அலங்கரிக்கப்பட்டு ஆறு மற்றும் கடலில் உற்சவா்கள் வலம் வருவது வழக்கம். இதன்படி, தைக்கால் தோணித்துறையில் கருப்ப முத்துமாரியம்மன் படகில் எழுந்தருளி உப்பனாற்றில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல மீன்பிடி துறைமுகத்தில் தைக்கால் தோணித்துறை கெங்கை அம்மன், சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத்தோப்பு வெள்ளி ரியம்மன், சலங்கைக்காரத் தெரு நாகமுத்து மாரியம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை முத்துமாரியம்மன், அக்கரைக்கோரி கண்ணனூா் மாரியம்மன் ஆகிய உற்சவா்கள் படகுகளில் எழுந்தருளி வலம் வந்தனா்.
பின்னா் மீன்பிடி துறை முகத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதனால், துறைமுகம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. மேள தாளங்கள் முழங்கிட வாண வேடிக்கையுடன் சாமிகள் படகுகளில் கடற்கரையோரமாக உலாவந்து துறை முகம் மீன்பிடித்தளத்தில் நிறுத்தப்பட்டது.
விழா மிகவும் ரம்மியமாக இருந்ததால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். விடிய விடிய நடை பெற்ற இந்த மாசி மக திருவிழாவில் பல்லாயி ரக்கணக்கானோர் குவிந்து விடிய விடிய சுவாமி தரிசனம்
செய்தனர்.