முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடை விழா 23-ந்தேதி தொடங்குகிறது
- 25-ந்தேதி பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது.
- 26-ந்தேதி உற்சவமூர்த்திகளுக்கு நீராட்டு நடக்கிறது.
முப்பந்தல் அருகே ஆலமூடு அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பூக்குழி கொடைவிழா ஒவ்வொறு வருடமும் ஆடி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பூக்குழி கொடைவிழா வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
விழாவில் 23-ந் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை தொடர்ந்து அகண்ட நாம ஜெபம், 8 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு சீர்வரிசைகள் செய்துவிட்டு, அம்மன்ஜோதி அலங்கரிக்கபட்ட ரதத்தில் கிருஷ்ணம்மாள் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, இரவு 10 மணியளவில் ஆலமூடு கோவில் வந்தடைதல். மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு அம்மன் ஜோதிக்கு சிறப்பு வழிபாடும், தீபாராதனையும் நடக்கிறது.
விழாவில் 24-ந் தேதி காலை 8 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 4 மணிக்கு அம்மன் சிங்கவாகனத்தில் பவனி வருதல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை, 9 மணிக்கு தீபாராதனை நடக்கிறது.
25-ந் தேதி காலை 7 மணிக்கு ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று அருகே உள்ள குட்டிகுளத்து இசக்கியம்மன் கோவில்-பிள்ளையார் கோவிலில் இருந்து பூங்கரகம், அபிஷேக குடங்கள், முளைபாத்தி, வேல் குத்து, பறவை காவடி, சூரிய காவடியுடன் பக்தர்கள் பஜனை மற்றும் மேளதாளங்களுடன் ஆலமூடு அம்மன் கோவில் வருதல். ஊர்வலத்தை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் தொடங்கி வைக்கிறார்.
காலை 8 மணிக்கு அம்மன் சன்னதியில் 108 கலசங்களுடன் கலச பூஜை, 11 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து அன்னதானம், 12.30 மணிக்கு சாமிகள் பாயாச குளியல், மதியம் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 4 மணிக்கு அக்னிசட்டி எடுத்தல், 5 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், இரவு 7 மணிக்கு பூக்குழி பூஜையும், அக்னி வளர்த்தலும், நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, பூப்படைப்பு, 1 மணிக்கு பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அதிகாலை 3 மணிக்கு ஊட்டு படைத்தல் நடக்கிறது.
26-ந் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, பகல் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு மஞ்சள் நீராடுதல் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு நீராட்டு, மதியம் 2.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருஷ்டி பூஜை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் இ.அருணாசலம் தலைமையில் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர், மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.