வழிபாடு

தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்தப்படம்.

நாகராஜா கோவில் தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-01-28 06:00 GMT   |   Update On 2023-01-28 06:00 GMT
  • 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
  • 6-ந்தேதி திருக்கோவில் திருக்குளத்தில் ஆராட்டு நடைபெறும்.

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா இன்றுகாலை 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக இன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

இதைத் தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் நம்பூதிரிகள் கொடி ஏற்றி வைத்தனர். கொடியேற்று விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இணை ஆணையர் ஞானசேகர், சுவாமி பத்மேந்திரா கோவில் மேலாளர் ராமச்சந்திரன், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், சுரேந்திர குமார், மாநகர செயலாளர் ஆனந்த், கவுன்சிலர்கள் ரோசிட்டா, கலாராணி மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது

கொடியேற்று விழாவில் கலந்து கொள்ள வந்த பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் இரவு 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளால் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழா நாட்களில் புஷ்ப விமானம், சிங்க வாகனம், கமலம் வாகனம், சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், ஆதிசேஷ வாகனம், யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

தினமும் சிறப்பு அபிஷேகங்கள் தீபாராதனைகள் இன்னிசை கச்சேரிகள் சமய சொற்பொழிவு பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது .

9-ம்திருவிழாவான 5-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் வடம்பிடித்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை 6 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு கச்சேரியும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெறும்.

10-ம் திருவிழாவான 6-ந்தேதி காலை சிறப்பு அபிஷேகமும் சிறப்பு வழிபாடும் ஆன்மீக சொற்பொழிவு சொல்ரலுமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நாகராஜா திருக்கோவில் திருக்குளத்தில் வைத்து ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு ஆராட்டு துறையிலிருந்து சாமி திருக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும்.

தேரோட்டத்தையொட்டி நான்கு ரத வீதிகளும் சீரமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. தேரேட்ட விழாவில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். எனவே அதற்கான முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News