வழிபாடு
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- விழா வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
- தினமும் பிரார்த்தனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. விழாவிற்கு திண்டுக்கல் முதன்மை குரு சகாயராஜ் தலைமை தாங்கினார். அகரக்கட்டு பங்குத்தந்தை எட்வின்ராஜ், சுரண்டை பங்குதந்தை ஜோசப்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது. விழா வருகிற 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
தினமும் பிரார்த்தனை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தையும், வட்டார அதிபருமான போஸ்கோ குணசீலன், உதவி பங்கு தந்தை அந்தோணி ராஜ் மற்றும் பங்கு பேரவையை சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள்.