வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-03-08 01:30 GMT   |   Update On 2024-03-08 01:31 GMT
  • திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் ரிஷப வாகன பவனி.
  • திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, மாசி 25 (வெள்ளிக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: திரயோதசி இரவு 8.19 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: திருவோணம் காலை 8.30 மணி வரை. பிறகு அவிட்டம்.

யோகம்: மரண, சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று பிரதோஷம், சுபமுகூர்த்த தினம். மகாசிவராத்திரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அருகருகே உள்ள 12 சிவாலயங்களில் (102 கி.மீட்டர்) இன்று சிவாலய ஓட்டம் என்ற பெயரில் இன்று இரவு ஓடி கடக்கும் நிகழ்வு. திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர் திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் அராள கேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத் குஜாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-ஆக்கம்

ரிஷபம்-சோர்வு

மிதுனம்-இன்பம்

கடகம்-உற்சாகம்

சிம்மம்-ஊக்கம்

கன்னி-பதவி

துலாம்- ஓய்வு

விருச்சிகம்-அமைதி

தனுசு- சுகம்

மகரம்-பரிவு

கும்பம்-சுபம்

மீனம்-பண்பு

Tags:    

Similar News