வழிபாடு
ஸ்ரீரங்கம் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் சிறப்பு தரிசன வழி அறிமுகம் செய்ய திட்டம்
- 500 பக்தர்கள் மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
- பக்தர்கள் தங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்.
சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தபடி தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோவில்களான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகியவற்றில் ரூ.300 கட்டணத்தில் தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை 500 பக்தர்கள் மட்டும் சிறப்பு தரிசன வழியில் அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பக்தர்கள் தங்கள் கருத்துக்களை jceotry25700.hrce@tn.gov.in என்ற இ-மெயில் மூலமோ அல்லது இணை ஆணையர் அல்லது செயல் அலுவலர், ரெங்கநாதசுவாமி திருக்கோவில், ஸ்ரீரங்கம் என்ற முகவரிக்கோ அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதிக்குள் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.