கீழவண்ணான்விளை சிவ சுடலைமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது
- கும்பாபிஷேக விழா இன்று தொடங்கி நாளை வரை நடக்கிறது.
- கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 48 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
நாகர்கோவில் அருகே உள்ள கீழவண்ணான்விளை சிவ சுடலைமாடசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று(சனிக்கிழமை) தொடங்கி நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.
விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை, காலை 7 மணிக்கு நவகிரக பூஜை, 8 மணிக்கு சுதர்சன ஹோமம், மாலை 5 மணிக்கு மங்கள இசை, யாகசாலை நிர்மாணம், புனித நீர் எடுத்து வருதல், 6.30 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜைகள், வாஸ்து ஹோமம், இரவு 7 மணிக்கு காப்புகட்டுதல், 10 மணிக்கு புதிய சிலை பிரதிஷ்டை ஆகியவை நடக்கிறது.
நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜைகள் ஆரம்பம், காலை 9 மணிக்கு ஜீவ கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்படுதல், தொடர்ந்து கும்பாபிஷேகம், சகல பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், 11 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு மகேஷ்வர பூஜை, 1 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு கீழவண்ணான்விளை முத்தாரம்மன் மகளிர் மன்றத்தாரின் திருவிளக்கு பூஜை, இரவு 7:30 மணிக்கு தீபாராதனை நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து 48 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.
கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.