வழிபாடு
null

புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டின் மகத்துவம்...

Published On 2024-10-05 06:12 GMT   |   Update On 2024-10-05 07:07 GMT
  • திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார்.
  • புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதமானது புதன் பகவானுக்குரியதாகும். புதன் கிரகத்திற்கு, அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால் புரட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். திருப்பதி சந்திரனுக்குரிய ஸ்தலமாகும். சந்திரனின் மகனாகிய புதனின் அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால், புரட்டாசியில் அவரை வழிபடுவது நல்லது. புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சனியின் கெடுபலன்கள் நீங்குவதோடு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் 3 தலைமுறை முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்பது ஐதீகமாகும்.

புரட்டாசி சனிக்கிழமையில் 108 திவ்ய தேசங்களில் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை கொண்டு விளக்கேற்றி துளசி சாற்றி வணங்குவது நல்லது. பின்னர், பெருமாளுக்கு பிடித்த அவல், வெண்ணெய், பால் பாயாசம், பலகாரம் போன்றவற்றை படையல் செய்து வழிபட மகாவிஷ்ணுவின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.

மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதால் பெருமாளின் அருளோடு, குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். 

Tags:    

Similar News