வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2023-08-18 02:05 GMT   |   Update On 2023-08-18 02:05 GMT
  • திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
  • திருநெல்வேலி நெல்லையப்பருக்கு தாமிரபரணி ஆற்றில் அபிஷேக விழா.

இன்றைய பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஆவணி-1 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை.

திதி: துவிதியை இரவு 7.40 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: பூரம் இரவு 11.20 மணி வரை. பிறகு உத்திரம்.

யோகம்: சித்த யோகம்

ராகுகாலம்: காலை 10.30மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சந்திர தரிசனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருநெல்வேலி நெல்லையப்பருக்கு தாமிரபரணி ஆற்றில் அபிஷேக விழா. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. திருவேடகம் ஏலவார் குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

இன்று ஆவணி மாதம் பிறப்பு - 3 நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது

இன்று (வெள்ளிக்கிழமை) ஆவணி மாதம் பிறந்தது. இந்த ஆவணி மாதப் பிறப்புக்கு 'விஷ்ணுபதீ' என்று பெயர். இன்று செய்யப்படும் நதி நீராடல், பூஜை, பிரார்த்தனை, பாராயணம் ஆலய வழிபாடு ஆகியவைகளுக்கு சிறப்பான பலன் உண்டு.

ஆவணி மாதப் பிறப்புக்கு, நெய், சொம்புடன் பால், பசு, பழங்கள் ஆகிய பொருட்களை விஷ்ணுவுக்கு படைத்து வழிபட்டு தானம் செய்வது மிகச் சிறந்தது. இன்று ஆவணி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறப்பதால் பூரம்-பரணி-பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தானங்களைச் செய்வது மிக, மிக நல்லது.

வசதி உள்ளவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நித்யகர்மாவை முடித்து விட்டு நெய், சொம்புடன் பால், பசு, பழங்கள் ஆகிய பொருட்களை எடுத்துக் கொண்டு சுவாமி சன்னதியில் தரையில் வைத்து வணங்கி விட்டு, பிறகு அவற்றை எடுத்து ஏழைகளுக்கு தந்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் நீண்ட ஆயுள், மாதம் முழுவதும் நிம்மதி, பணவரவு, நல்லோர் சேர்க்கை, மனசாந்தி முதலியவை ஏற்படும்.

இன்றைய ராசிபலன்

மேஷம் - சுகம்

ரிஷபம் - மாற்றம்

மிதுனம் - வெற்றி

கடகம் - சுபம்

சிம்மம் - நட்பு

கன்னி - கடமை

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - தாமதம்

தனுசு - முயற்சி

மகரம் - தடை

கும்பம் - பொறுப்பு

மீனம் - பயணம்

Tags:    

Similar News