வழிபாடு

கோவிலில் இறைவன் தரிசனத்திற்கு முன் தானம்... ஏன் தெரியுமா?

Published On 2023-01-04 08:06 GMT   |   Update On 2023-01-04 08:06 GMT
  • கோவிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது.
  • புண்ணிய தீர்த்தங்களை காலில் தேய்க்ககூடாது.

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இறைவனை வணங்கி விட்டு வரும் போது தானம் செய்வதை விட சாமி கும்பிடும் முன்பாக தானம் செய்வதால் புண்ணியம் அதிகரிக்கும். கோவிலுக்கு எப்போதும் வெறும் கையுடன் கோவிலுக்கு செல்ல கூடாது. பழம், பூ, எண்ணெய், காணிக்கை இதில் எதாவது ஒன்றை வலது கையில் கொண்டு செல்ல வேண்டும்.உடல், ஆடை,மனம் எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும்.

பிரதான நுழைவாயில் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும் மூடியிருக்கும் கோவிலில் வெளியில் இருந்து சாமி கும்பிடக் கூடாது. வாகனங்களில் சென்றபடியே கடவுளை வணங்கக் கூடாது. அது கடவுளை அவமதிக்கும் செயலாகும்.கோபுர தரிசனம் கோடி புண்ணியம், கோபுரத்தினை ஆண்கள் தலைக்குமேல் இரு கைகளையும் குவித்தும். பெண்கள் மார்புக்கு நேரே கைகளை குவித்தும் வணங்கவேண்டும். பலி பீடத்திற்கு அருகில் சென்று வணங்கி நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியம் என்னும் ஆறு தீய குணங்களை பலி கொடுத்ததாக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

பலி பீடத்தில் சிறிது உப்பு, மிளகைக் கொட்டி பிரார்த்தனை செய்தால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம். பலி பீடத்தை குறைந்தது மூன்று முறை அல்லது ஐந்து முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலவருக்கும், எதிரில் உள்ள நந்திக்கும் இடையில் விழுந்து வணங்குவதோ, குறுக்கே செல்வதோ கூடாது.

தெய்வ வாகனங்களில் மூக்கில் இருந்து வரும் காற்று மூலவருக்கும் போய் உயிர்நிலை தருவதாக ஐதீகம். தெய்வ வாகன ங்களின் வாலை பக்தி யுடன் தொட்டு கண்க ளில் ஒற்றிக்கொள்ள வேண்டும்.கோவிலில் பிரகாரங்களை வலம் வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. மெல்ல நடக்க வேண்டும். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை வணங்கினாலே நவக்கிரகங்களை வணங்கிய பலன் கிடைக்கும்.

கோவில்களில் செய்யக் கூடாதவை:

எச்சில் துப்பக்கூடாது, தூங்கக் கூடாது, நம்மைவிட சிறியவர் கையில் இருந்து விபூதியை எடுத்து நாம் வைக்கக் கூடாது. கோவிலுக்குள் மற்றவர்களுக்கு வணக்கம் செலுத்தக்கூடாது. சத்தமாக சிரிக்க கூடாது, மொபைலில் பேசவும் கூடாது.

பெருமாள் கோவிலாக இருந்தால் உட்காராமல் வீட்டிற்குச் சென்றால் லட்சுமி தேவி நம்முடன் வருவதாக ஐதீகம். கொடி மரத்திற்கு எதிரில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வெளியில் வர வேண்டும்.கோவிலில் தூங்க கூடாது. கொடிமரம்,நந்தி,பலிபீடம் , இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது.

குளிக்காமல் கோவிலுக்கு போகக்கூடாது. கோவிலில் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது. மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது. படிகளில் உட்கார கூடாது. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது. எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது.

வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது. கிரகணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .

புண்ணிய தீர்த்தங்களை காலில் தேய்க்ககூடாது. கோவிலுக்கு போய்விட்டு வந்தால் நேராக நம் வீட்டிற்கு செல்ல வேண்டும், வேறு எங்கும் போக கூடாது. வீட்டிற்குள் அப்படியே செல்ல வேண்டும்.அப்போது தான் கடவுளி டம் நாம் கோவிலில் பெற்ற வரம் நேராக நமது இல்லத்தில் நிலைத்து இருக்கும்.'

Tags:    

Similar News