வழிபாடு

திருநாவுக்கரசரை வழிபடுங்கள்

Published On 2023-05-13 07:31 GMT   |   Update On 2023-05-13 07:31 GMT
  • திருநாவுக்கரசர் செய்த பணிகள் தனித்துவம் வாய்ந்தது.
  • விதிவசத்தால் சமணர்களுடன் சேர்ந்தவர்.

ஆன்மிகத்துக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் நால்வார்கள் செய்துள்ள சேவைகள் நிகரற்றது. நால்வரில் அப்பர் என்ற திருநாவுக்கரசர் செய்த பணிகள் தனித்துவம் வாய்ந்தது. இவர் சிவனடியார் குடும்பத்தில் தோன்றி, 'விதிவசத்தால் சமணர்களுடன் சேர்ந்தவர். பிறகு சூலை நோய்க்கு ஆளாகி சகோதரி திலகவதியார் சிவபெருமானை துதித்து தந்த விபூதியினால் சூலை நோய் குணமாக பெற்றார்.

இதனால் மீண்டும் சைவம் திரும்பினார். இவரது இனிய தேவாரப்பாடல்கள் இல்லாமல் தமிழே இல்லை எனலாம். திருஞானசம்பந்தரால் அப்பரே என அழைக்கப்பட்ட இம்மகான் பாம்பு கடித்து உயிரிழந்த அப்பூதியடிகளின் மகனை மீட்டது போன்ற எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தியவர்.

இவர் சைவம் திரும்பியதால் கோபம் கொண்டு சமண சமயம் சார்ந்த மகேந்திரவர்ம பல்லவ மன்னன், இவரை கல்லைகட்டி கடலில் போட சொன்னார். ஆனால் ஈசன் அருளால் இவருக்கு எந்தவிதமான ஒரு தீங்கும் ஏற்படவில்லை.

இவர் மகிமை அறிந்து பல்லவ மன்னன் தானும் சைவம் சேர்ந்தான். சமயக்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் திருநட்சத்திரமான நாளை சிவன் கோவில் சென்று தரிசிப்பது பெரும் புண்ணியம் தரும்.

Similar News