வழிபாடு

பிரதோஷ காலத்தில் இதை கண்டிப்பாக செய்ய கூடாது....

Published On 2024-05-05 05:25 GMT   |   Update On 2024-05-05 05:25 GMT
  • பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம்.
  • பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது.

பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதால் நல்ல பலன் பெற முடியும். பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையான மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.

பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.

பிரதோஷ தினத்தில் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அவற்றை பார்ப்போம்.


பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது

பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது. பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோஷ நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.

மஞ்சள் கூடாது

பிரதோச தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது. சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது. அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.

இவற்றையெல்லாம் படைக்கக் கூடாது

சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியனவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.

பிரதோசத்தன்று இதை சாப்பிட கூடாது

பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பெண்கள் பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது.

Tags:    

Similar News