வழிபாடு

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-07-20 06:35 GMT   |   Update On 2023-07-20 06:35 GMT
  • சனிக்கிழமை திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறும்.
  • திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் இருந்து நாளை காலை 7 மணிக்கு காவிரி ஆற்றுக்கு வெள்ளிக்குடம் எடுத்துச்செல்லப்படும். காலை 8 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலம் புறப்படும். காலை 9.30 மணிக்கு புனிதநீர் கோவிலை வந்தடையும். காலை 10 மணிக்கு அங்கில் ஒப்புவித்தல், அங்கில் சுத்தம் செய்து திரும்ப ஒப்புவித்தல் பகல் 3 மணிக்கு நடைபெறும். மாலை 5 மணிக்கு மங்களஆரத்தி நடைபெறும்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) திருப்பாவாடை நிகழ்ச்சி நடைபெறும். இதையொட்டி காலை 7 மணிக்கு திருமடப்பள்ளியில் இருந்து தளிகை எடுத்தலும், காலை 10.45 மணிக்கு தளிகை அமுது செய்தலும் நடைபெறும். காலை 11 மணிக்கு திருப்பாவாடை கோஷ்டி மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும். காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை பொது ஜன சேவை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News