வழிபாடு

காளப்பட்டியில் வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது

Published On 2023-06-22 07:02 GMT   |   Update On 2023-06-22 07:02 GMT
  • 24-ந்தேதி புதிய விக்ரகங்கள் ஆதிவாசன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • அன்னதானம் வழங்கப்படுகிறது.

கோவை காளப்பட்டியில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார் ,கருப்பராய சுவாமி மற்றும் நவக்கிரக பரிவார தெய்வங்களுக்கென தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோவிலின் ஜீரணோத்தாரண அஷ்டபந்தன 5-வதுமகா கும்பாபிஷேக திருவிழா நடைபெறுகிறது.

விழாவில் இன்று மாலை 5 மணிக்கு தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்ச்சியும், நாளை காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சுதர்சன ஹோமம் ஆகிய யாக பூஜையும், 9.30 மணிக்கு மங்கள இசை முழங்க விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது.

24-ந் தேதி காலை 11 மணிக்கு மங்கள இசையுடன் தேவார பதிக விண்ணப்பம், விசேஷ சாந்தியுடன் 2-ம் கால வேள்வி பூஜையுடன் புதிய விக்ரகங்கள் ஆதிவாசன் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானத்தில் யந்திர பிரதிஷ்டை, வீரமாத்தி அம்மன் அஷ்டபந்தன மருந்து சாத்துதவ் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு மங்கள இசையுடன் திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், 7.45 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜையும் நடைபெறுகிறது.

அதனைத்தொடர்ந்து காலை 9.45 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், 10.10 மணிக்கு கோபுர விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் 10.35 மணிக்கு மூலஸ்தானம், ஸ்ரீவீரமாத்தி அம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News