வழிபாடு
null

குழந்தை வரம் வேண்டுமா? அப்போ இந்த கோவிலுக்கு போங்க...

Published On 2024-06-22 08:20 GMT   |   Update On 2024-06-22 11:33 GMT
  • பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.
  • கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.

குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில். இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார். கோயிலில் நுழைந்தாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது. அதோடு கோயில் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தின் வாசம் இருக்கிறது.

குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுபப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் விளங்குகிறது.

பெரும்பாலான கோயிலில் அம்மன் நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார்.

அம்மனுக்கு பின்புறம் தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேஸ்வரி, விநாயகர் ஆகியோர் உள்ளனர். சன்னதிக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்துள்ளது.

குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்களும், குடும்ப பிரச்னை தீர வேண்டும் என வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளிக்கக்கூடிய அம்மனாக திகழ்கிறாள்.

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டி அவர்களது பெற்றோரோ, கணவரோ, உறவினர் என இங்கு வந்து வேண்டி செல்கின்றனர்.

இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

அதே சமயம் ஆடி மாதம் தொடங்கிவிட்டால் எல்லா நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் புட்லூர் அம்மனை தரிசிக்கக் குவிகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வருகின்றனர்.

இந்த இடம் முன்னர் பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் சென்றால், புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில்.

இந்த கோயிலில் கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.

Tags:    

Similar News