கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவால் விலை திடீர் அதிகரிப்பு
- கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது.
- இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா கேரளா, உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கள் விற்பனைக்கு வருகிறது.
விவசாய பணியில் ஈடுபட்டு வரும் தொழி லாளர்களில் பெரும்பா லானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 நாட்கள் வரை விடுமுறை எடுத்து சென்றுவிட்டனர். இதனால் காய்கறி உற்பத்தி மற்றும் அறுவடை செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி வரத்து கடந்த 2 நாட்களாகவே வெகுவாக குறைந்துவிட்டது.
கடந்த வாரம் வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்து வந்தது. இந்த நிலையில் இன்று 300 லாரிகளில் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதனால் காய்கறி விலை திடீரென அதிகரித்து உள்ளது.
கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ரூ.40-க்கு விற்ற பீன்ஸ் தற்போது விலை அதிகரித்து ரூ.70-க்கும், ரூ.50-க்கு விற்ற ஊட்டி கேரட் ரூ90-க்கும், ரூ.70-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.10-க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது.
அதேபோல் கத்தரிக்காய், முட்டை கோஸ், அவ ரைக்காய் உள்ளிட்ட பெரும்பாலான பச்சை காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரித்து உள்ளது.
தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் சின்ன வெங்காயம் இன்று ஒரு கிலோ ரூ.110-க்கு விற்கப்பட்டு வருகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகளில் ஊட்டி கேரட் ஒரு கிலோ ரூ.120 வரையிலும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரையும் விற்கப்படுகிறது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் பச்சை காய்கறிகள் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-
தக்காளி-ரூ.23.
நாசிக் வெங்காயம்-ரூ.36
ஆந்திரா வெங்காயம்- ரூ.20
சின்ன வெங்காயம்- ரூ.110
உருளைக்கிழங்கு-ரூ.27
ஹாசன் உருளைக்கிழங்கு- ரூ.42
கத்திரிக்காய்- ரூ.20
வரி கத்திரிக்காய்- ரூ.15
அவரைக்காய்- ரூ.40
வெண்டைக்காய்- ரூ.25
பீன்ஸ்- ரூ.70
ஊட்டி கேரட்-ரூ.90
பீட்ரூட்- ரூ.25
முள்ளங்கி- ரூ.22
வெள்ளரிக்காய்- ரூ.12
கோவக்காய்- ரூ.35
பன்னீர் பாகற்காய்- ரூ.40
முட்டை கோஸ்- ரூ.20
காலி பிளவர் ஒன்று - ரூ.25
முருங்கைக்காய்- ரூ.90
சுரக்காய்- ரூ.15
புடலங்காய்-ரூ.15
பீர்க்கங்காய்-ரூ.35
சவ்சவ்-ரூ.15
இஞ்சி-ரூ.65.