ஆண்களை அச்சப்படுத்தும் மார்பக வளர்ச்சி....ஏன் தெரியுமா?
- மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகிறது.
- அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டையும் அடக்குகிறது.
ஆண்களுக்கு பருவ வயதைக் கடந்த பின்னரும் மார்பகம் பெரிதாக இருக்கும் நிலை "கைனகோமாஸ்டியா" எனப்படும். இது மார்பகங்களில் உள்ள சுரப்பி திசுக்களின் விரிவாக்கம் ஆகும். மார்பக சுரப்பி திசுக்களின் வளர்ச்சிக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் காரணமாகிறது.
அதிக ஈஸ்ட்ரோஜன் அளவு டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டையும் அடக்குகிறது. ஏனெனில் இது விந்தணுக்களில் டெஸ்டோஸ்டிரோன் வெளியீட்டிற்கு காரணமான ஹார்மோனான, லுடினைசிங் ஹார்மோனை அடக்குகிறது.
ஈஸ்ட்ரோஜனின் அதிகரிப்பு மற்றும் டெஸ்டோஸ்டிரோன் குறைதல் ஆகியவை பெரும்பாலும் கைனகோமாஸ்டியாவுக்கு வழிவகுக்கிறது.
காரணங்கள், அறிகுறிகள்:
1) கைனகோமாஸ்டியா ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களினால் இது ஏற்படுகிறது.
2)அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் கட்டிகள், பிட்யூட்டரி சுரப்பியில் ஏற்படும் கட்டிகள் காரணமாக வருகிறது.
3) ஆண்ட்ரோஜன் எதிர்ப்பு மருந்துகள், உடல் பருமன், தீவிர கல்லீரல் நோய், சிறுநீரக நோய் போன்ற காரணங்களால் ஆண்களுக்கு மார்பக அளவு பெரிதாகிறது.
4) பெரும்பாலான ஆண்களுக்கு எந்த அறிகுறியும் காணப்படாது. இதனால் ஒரு வித அசவுகரியம் ஏற்பட்டு, மன அழுத்தம் உருவாகலாம். ஒரு சிலருக்கு தான் வலி ஏற்படுகிறது.
சித்த மருத்துவம்:
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் கீழ்க்கண்ட மூலிகைகள் நல்ல பலனைத் தரும்.
1) முருங்கை விதைப் பொடி, நெருஞ்சில் சூரணம், அமுக்கரா சூரணம் ஆகியவற்றில் தலா ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு நேரங்களில் வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட வேண்டும்.