null
பீல் ஆஃப் மாஸ்க் பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லதா?
- எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க் நன்மை பயக்கும்.
- தேவையற்ற முடிகளை அகற்றாது.
சருமத்தில் தூசி மற்றும் காற்று மாசுபாடு, பாக்டீரியாக்கள் போன்றவை படிந்தால், முகப்பரு, அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தோலை பராமரிக்க சந்தையில் ஏகப்பட்ட கிரீம்கள் கிடைக்கின்றன.
அப்படி, அனைவராலும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பீல்-ஆஃப் மாஸ்க் (peel-off mask) என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. ஏனென்றால், இது எக்கச்சக்க நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் தான், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதை உபயோகிக்கின்றனர்.
குறிப்பாக, சருமத்தில் காணப்படும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை அகற்ற Peel Off மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஜெல் அல்லது நீர் சார்ந்த பீல்-ஆஃப் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். அது உங்கள் சருமத்தில் செய்யும் அதிசயங்களையும் காணலாம்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க்குகள் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அவை துளைகளை அடைப்பதன் மூலம் உங்கள் தோலில் இருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. மேலும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனர்களை விட தோலை நீக்கும் முகமூடிகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும்.
கவனிக்க வேண்டியவை:
* Peel Off மாஸ்க் உண்மையில் சரும சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே, இந்த வகை மாஸ்கினை வாரம் 1 அல்லது 2 முறை (தேவை இருப்பின்) பயன்படுத்தினால் போதுமானது.
* Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின்னர் முகத்தை கழுவ வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இதற்கான பதில் வேண்டாம் என்பது தான். எனினும் எரிச்சல், அரிப்பு இருப்பது போல் உணர்பவர்கள் முகத்தை கழுவலாம்.
* Peel Off மாஸ்க்-கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை (பெண்களின் மீசை) அகற்றுமா என்ற சந்தேகம் இருப்பின், கவலை வேண்டாம். இந்த பேக், தேவையற்ற முடிகளை அகற்றாது. வெண்புள்ளிகளை மட்டுமே அகற்றும்.
* Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின் சருமம் பொலிவாக இருப்பது போல் தோன்றுவது உண்மை தான். சருமத்தின் இறந்த செல்களை இந்த மாஸ்க் அகற்றுவதால் இப்படி தோன்றுகிறது, எனினும் இந்த பொலிவு நிரந்தரமான ஒன்று அல்ல.
* Peel Off மாஸ்க் பயன்படுத்துகையில் வலி உண்டாவது உண்மை தான். அதேப்போன்று இந்த மாஸ்க் ஆனது, சருமத்துளைகள் சேதம் மற்றும் சிவத்தலுக்கு வழிவகுக்கும் என்பதால், நிபுணர்கள் அதிகம் இந்த மாஸ்கினை பரிந்துரைப்பதில்லை.