அழகுக் குறிப்புகள்

குளியல் சோப்பை கடையில் வாங்காமல் இனி வீட்டிலேலே செய்யலாம்

Published On 2023-10-20 09:50 GMT   |   Update On 2023-10-20 09:50 GMT
  • வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்.
  • பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

முதலில் நீங்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற அல்லது உங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்புகளில் எந்த சோப்பை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியதாக அந்த சோப் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தேவையான பொருட்களை சேர்த்து வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம். அதை நீங்கள் சந்தைப்படுத்தவும் செய்யலாம். வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ளவர்கள் என கொடுத்து பரிசோதித்துவிட்டு பின்னர் சந்தைப்படுத்த தயார் ஆகலம். இப்படி விதவிதமான சோப்புகள் உள்ளன. வீட்டிலேயே தயாரிக்க கூடிய சில சோப் வகைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்...

ஸ்கின் ஒயிட்டனிங் சோப்

மைசூர் பருப்பு 50 கிராம் எடுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனுனர் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 விட்டமின் ஈ கேம்ஸ்யூல், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ரெகுலர் சைஸ் டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் சோப் வாங்கி அதை மெல்லிய ஸ்லைஸ்களாக துண்டாக்கி கொள்ள வேண்டும். ஸ்லைஸ் செய்த சோப் துண்டுகளை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கினால் அது உருகிவிடும். உருகிய சோப் கலவையுடன் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கலவையையும் சோப் கலவையில் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சூடு கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்கு பிடித்த சோப் மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆறவிடவும். ஆறிய பிறகு மோல்டுகளில் இருந்து பிரித்து எடுக்கலாம்.

வேப்பிலை சோப்

ஒரு கைப்பிடி வேப்பிலைகளை எடுத்து அதனை நன்றாக கழுவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் 2 வைட்டமின் ஈ எண்ணெய்யும் சேர்த்து கலந்து இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த கலவையை அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் வேப்பிலை சோப் தயார். இது நாம் வீட்டிலேயே தயாரிக்கும் சோப் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. வேப்பிலை சோப் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை விரட்டவும், சருமத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

கற்றாலை சோப்

சுத்தமான கற்றாலை ஜெல் ஒரு கப் எடுக்க வேண்டும். அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 2 கேப்ஸ்யூல் சேர்க்க வேண்டும், இதனுடன் பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து க்ரீம் பதத்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த க்ரீமையும் அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் கற்றாலை சோப் தயார். இந்த சோப் ஸ்கின் ஒயிட்டனிங்கிற்கும் பயன்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உடலுக்கு நல்ல சைனிங் மற்றும் குளோவாக இருப்பதற்கும் உதவுகிறது.

Tags:    

Similar News