மேக்கப்பை விரும்பாத பெண்களுக்கான அழகுக்குறிப்புகள்
- அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள நினைப்பார்கள்.
- ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள். இதற்காக பலரும் கடைகளில் விற்கும் காஜல், மஸ்காரா, பவுண்டேஷன், ஐ லைனர், லிப் லைனர், ரோஸ் என பல பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு சில பெண்களுக்கு மேக்கப் போடுவது சுத்தமாகப் பிடிக்காது. அந்தவகையில், மேக்கப் போட விரும்பாத பெண்களாக இருந்தால் அழகுகுறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
தண்ணீர் குடித்தல்
உடலில் நீர்ச்சத்து குறையும் போது சருமம் வறண்டு விடக்கூடும் என அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
புருவங்களைத் திருத்துதல்
பெண்களின் முகத்திற்கு கூடுதல் அழகு சேர்ப்பது அவர்களின் புருவ அழகுதான். அழகு நிலையங்களுக்கு சென்று புருவங்களைத் திருத்திக் கொள்ளலாம். மேலும், கண்மைகளை பயன்படுத்தி புருவத்தின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
சரும பராமரிப்பு
சருமத்தில் எவ்வித பிரச்சனைகள், அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்க, முகத்திற்கு எண்ணெய் மற்றும் சீரம் பயன்படுத்தவும். மேலும், ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை அதிகளவு உண்ணவேண்டும்.
ஹேர் ஸ்டைல்
மேக்கப் விரும்பாத பெண்கள், சிகை அலங்காரத்திலும் அவர்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளலாம். ஆடைகளுக்கு ஏற்ற விதவிதமான ஜடைகள், பூக்கள் போன்றவற்றை வைத்து அழகாக்கிக்கொள்ள முடியும்.
உதடு பராமரிப்பு
உதடு வெடிப்பு, உரிதல் போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நல்ல லிப் பாம் மட்டும் உபயோகிக்கலாம்.
உடைகளில் கவனம்
உடல் அமைப்பிற்கு ஏற்ற உடைகளை அணிவது உங்களை அழகாக காட்டும்.
இயற்கை அழகுசாதனப் பொருள்கள்
முகத்திற்கு மஞ்சள், தயிர், வெண்ணெய், எலுமிச்சை, பீட்ரூட், பப்பாளி போன்ற இயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்தி அழகை மேம்படுத்திக் கொள்ளலாம்.
மகிழ்ச்சியாக இருத்தல்
ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் மட்டுமே முகம் அழகாக தெரியும்.
தூக்கம்
சரியான தூக்கம் இல்லையென்றால் முதலில் கண்களை சுற்றி கருவளையம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரமாவது தூக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.