அழகுக் குறிப்புகள்

வீட்டிலேயே எளிய முறையில் பீட்ரூட் ஹேர் டை தயாரிப்பது எப்படி?

Published On 2022-08-10 04:54 GMT   |   Update On 2022-08-10 04:54 GMT
  • இளமையான தோற்றத்திற்கு சரும அழகு மட்டும் அல்லாது கூந்தலின் நிறமும் பங்கெடுக்கின்றது.
  • வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர்டை தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.

கூந்தல் உதிர்வு, கூந்தல் மெலிவு, நுனி பிளவு போன்ற பிரச்சனைகளை விட நரைமுடி வந்து விட்டால் உடற் தோற்றத்தில் திடீரென அதிகமான மாற்றம் ஏற்படுகின்றது. கண்ட கண்ட இராசாயனப் பொருட்களாலான ஹேர் டைகளை பயன்படுத்தி இருப்பதையும் கெடுத்துக் கொள்ளாமல் இப்படியான இயற்கை ஹேர் டைகளை பயன்படுத்துக் கொள்வோம்.

நரைமுடியை போக்க பீட்ரூட்டில் இயற்கை ஹேர் டைஎப்படி செய்வது என பார்ப்போம்.

தேவைப்படும் பொருட்கள்

இது ஒரு இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஹேர் டை. இதனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. இளநரை மற்றும் நரை முடி உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்.

கறிவேப்பில்லை – ஒரு கப்

சிவப்பு செம்பருத்தி பூ – 10

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்

தண்ணீர் – 200 மில்லி

பீட்ருட் – ஒன்று

காபி தூள் – மூன்று ஸ்பூன்

செய்முறை

அடுப்பில் ஒரு இரும்பு கடாயை வைக்கவும். அவற்றில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். தண்ணீர் நன்றாக சூடாகியதும், அவற்றில் மூன்று ஸ்பூன் காபி தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். காபித்தூள் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கும் போது நன்றாக நுரை கிளம்பும் என்பதால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொள்ளவும்.

மிக்சியில் நறுக்கிய பீட்ருட், கறிவேப்பிலை, சிகப்பு செம்பருத்தி பூ சேர்த்து தண்ணீர்விடாமல் நன்றாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த கலவையை காபித்தூள் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். ஒரு 10 நிமிடங்கள் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.

இந்த கலவை ஒரு மணி நேரத்துக்குள் நன்றாக ஆறிவிடும் என்றாலும், குறைந்தது 12 மணி நேரம் வரை வைத்திருந்த பின்பு தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

எனவே இந்த பீட்ருட் ஹேர் டையை மாலை நேரங்களில் தயாரித்து, மறுநாள் காலையில் பயன்படுத்துவது உகந்தது. கருமையான நிறத்தை பெற பலதடவை பயன்படுத்த வேண்டும்.

இயற்கை ஹேர் டை தயாரிக்க முடியாதவர்கள், சந்தையில் விற்பனையில் உள்ள இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.

Tags:    

Similar News