அழகுக் குறிப்புகள்

சாதம் வடித்த கஞ்சி கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவுமா...?

Published On 2024-03-01 09:35 GMT   |   Update On 2024-03-01 09:35 GMT
  • சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் கலக்கப் பயன்படுத்துவார்கள்.
  • கஞ்சியில் பெப்டைட்ஸ் மிக அதிக அளவில் இருக்கும்.

சாதம் வடித்த கஞ்சியைக் கூந்தலுக்கும், அரிசி களைந்த நீரை சருமத்துக்கும் பயன்படுத்துவது என்பது சமீபகாலமாக கொரியன் அழகு சிகிச்சைகளில் மிகவும் டிரெண்டாக உள்ள ஒன்று.

சாதம் வடித்த கஞ்சியை சருமத்துக்கும், கூந்தலுக்கும் பயன்படுத்தும் பாரம்பரியம் அந்த காலத்தில் இருந்தே உண்டு. சாதம் வடித்த கஞ்சியை சீயக்காய் கலக்கப் பயன்படுத்துவார்கள். இந்த கஞ்சியில் பெப்டைட்ஸ் மிக அதிக அளவில் இருக்கும். பெப்டைட்சின் பலன்களை உறுதிசெய்ய நிறைய ஆய்வுக்கட்டுரைகள் உள்ளன.

பெப்டைட்ஸ் என்பவை அமினோ அமிலங்கள் தான். அதாவது, ஒருவகை புரதம். இதை வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போதும் சரி, உள்ளுக்கு உட்கொள்ளும்போதும் சரி, மிக மிக நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இது சருமத்தின் இளமைக்கும் எலாஸ்டிக் தன்மைக்கும் காரணமான கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். ஆக்சிஜனேற்ற அழுத்தம்' எனப்படும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.

 வெயிலின் தாக்கத்தால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பையும். டி.என்.ஏ பாதிப்பையும் தடுக்கும் தன்மை பெப்டைட்சுக்கு உண்டு என்பதை உறுதிசெய்யும் தகவல்கள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில், சாதம் வடித்த கஞ்சியில் பெப்டைட்ஸ் ஓரளவு உள்ளது உண்மைதான்.

அதனால் இந்த தண்ணீர் அழகு சிகிச்சையில் பயன்படுத்தப்படுவது சரியானதுதான். ஆனால், இது மட்டுமே பெப்டைட்ஸ் தேவைக்குப் போதுமானதா என்றால் நிச்சயம் போதாது.

நம் சருமத்துக்குள்ளும் கூந்தலுக்குள்ளும் ஊடுருவும்படியான வடிவில் பெப்டைட்ஸ் உள்ள பொருட்களை உபயோகிப்பதுதான் சரியானது. வெளிப்பூச்சைவிடவும் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும்போது அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். முகத்தைக் கழுவவும் கூந்தலை அலசவும் இந்த தண்ணீரை தாராளமாக உபயோகிக்கலாம். அதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது.

Tags:    

Similar News