அழகுக் குறிப்புகள்

இளம் வயதிலேயே தோல் சுருங்குவதற்கான காரணம் என்ன தெரியுமா?

Published On 2024-05-15 09:13 GMT   |   Update On 2024-05-15 09:13 GMT
  • முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
  • மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும்.

அழகாக இருக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை தான். இதனால் பலரும் சந்தையில் விற்கப்படும் கிரீம்களை முகத்தில் அப்ளை செய்துவருகிறார்கள். சிலர் இயற்கை முறையில் தங்களை அழகு படுத்திக் கொள்கின்றனர். இருந்தாலும் பல நபர்களுக்கு இளம் வயதிலேயே தோல் சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதிலும் வயதானால் தோல் சுருக்கம் ஏற்படுவது இயல்பு தான். அதுவே இளம் வயதிலேயே தோல் சுருங்குகிறது என்றால் வருத்தமாக தான் இருக்கும். இதற்கு காரணம் நாம் எடுத்து கொள்ளும் உணவு முறை, பழக்க வழக்கம் போன்றவை தான் இளமையிலே முதுமை தோற்றம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.

புற ஊதா கதிர்கள் தான் தோல் சுருங்குவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த புற ஊதாக்கதிர்கள் தோலில் உள்ள கொலாஜன் உற்பத்தியை குறைத்து தோலினை சுருங்கச்செய்கிறது.

நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் சென்று வந்தாலும் சரி, வெயிலில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள உடல் முழுவதையும் ஆடைகளால் மறைத்துக்கொள்வது நல்லது.

இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு புகைப்பழக்கம் மற்றும் மது குடிப்பது போன்றவற்றை தவிர்த்துவிடுவது நல்லது. இது ரத்த ஓட்டத்தை குறைத்துவிடும். இதனால் தோல்கள் பலம் இல்லாமல் தொங்க ஆரம்பித்துவிடும்.

ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருந்தாலும் கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனாலேயும் தோல் சுருக்கம் ஏற்படும். எப்பொழுதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் பிரச்சினை இல்லை. இதனால் மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கூட தோல் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை எப்பொழுதும் ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.

சரியாக தூங்காமல் இருந்தாலும் பிஎச் அளவு மற்றும் ஈரப்பதம் இவை இரண்டும் குறைந்து தோலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியையும் குறைத்துவிடுகிறது. அதனால் சரியான தூக்கம் என்பது மிகவும் அவசியம்.

உடலில் சத்துக்கள் குறைந்தாலும் தோல் சுருக்கம் மற்றும் தோல் வியாதிகள் ஏற்படும். இதனால் தினமும் ஜூஸ் அல்லது ஏ.பி.சி. ஜூஸ் குடித்து வரும் போது தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து தோற்றம் பொலிவுபெறும்.

Tags:    

Similar News