அழகுக் குறிப்புகள்

நீங்கள் மேக்கப்பை விரும்புவரா...? அப்போ இது உங்களுக்கு தான்!

Published On 2024-04-11 06:49 GMT   |   Update On 2024-04-11 06:49 GMT
  • பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை.
  • நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம்.

நீங்கள் மேக்கப்பை நேசிப்பவரா? மிகவும் நுட்பமாக மேக்கப் செய்து கொண்டு, அலங்காரமாக காட்சி தருவதில் விருப்பம் கொண்டவரா? தினமும் பணிக்கு செல்வதற்கு முன், முகத்தை முழு அலங்காரம் செய்து கொள்ள போதிய நேரமும் இருக்கிறதா?

உங்கள் காலை நேரத்தை உடனடியாக அழகாக்கி, உங்கள் வாழ்க்கையை எளிமையாக்கும் நான்கு அழகு சாதன பொருட்கள். இவை பயணத்திற்கும் ஏற்றவை என்பதோடு மற்ற வேலைகளையும் கவனிக்கலாம். இவற்றை உங்கள் கைப்பையில் வைத்துக்கொண்டால் எப்போது வேண்டும் என்றாலும் எளிமையாக தயாராகலாம். பிசியாக இருக்கும் பெண்கள் தங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க கைவசம் வைத்திருக்க வேண்டிய அழகுசாதன பொருட்களை பற்றி பார்க்கலாம்...

 பவுண்டேஷன் கிரீம்

பவுண்டேஷன் மிகவும் அவசியமானவை. அதிலும் குறிப்பாக உங்களுக்கு நேர்த்தி குறைவான சருமம் இருந்தால், அவை மிகவும் அவசியம். ஆனால் இங்கு உண்மையை ஒப்புக்கொள்வோம். காலை நேரத்தில் முழுமையான பவுண்டேஷனை பயன்படுத்துவதற்கான நேரம் உங்களுக்கு இல்லை. அதாவது நீங்கள் தூக்கத்தை நேசிப்பவர் என்றால், உங்கள் குறைகளை மறந்து, பூசிக்கொள்ள அதிக நேரம் தேவைப்படாத பொருளை தான் நீங்கள் நாட வேண்டும். உங்கள் சருமத்தின் மீது லேசாக அமரக்கூடிய பிபி கிரீம் அல்லது சிசி கீரிமை போடலாம். அதற்கு குஷன் பவுண்டேஷனையும் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் பவுண்டேஷனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

காம்பேக்ட் பவுடர்

வெளியே செல்லும் எல்லா பெண்களின் கைப்பையிலும் இருக்க வேண்டிய பொருள் காம்பேக்ட் பவுடர். வியர்வை, ஈரப்பதம் மற்றும் முகத்தை தொடுவது போன்றவை பவுண்டேஷனை பாதிக்கிறது. எனவே நண்பகல் அளவில் உங்கள் மேக்கப்பை டச்சப் செய்வது அவசியம். ஆக, உங்கள் கைப்பையில் காம்பேக்ட் பவுடர் வைத்திருப்பது மிகவும் உதவியாக இருக்கும். காம்பேக்ட் பவுடர் உங்கள் சருமத்திற்கு மென்மையான பளபளப்பை தருவதோடு, பவுண்டேஷன் நீடித்து இருக்கவும் உதவுகிறது. வெப்பம் மிகுந்த நாட்களில் வெளியே செல்வதால் உண்டாகும் பாதிப்பாக துளைகளையும் அடைக்கிறது.

மஸ்காரா

பெண்களுக்கு மிகவும் தேவையான பொருட்களில் மஸ்காராவும் ஒன்று. இவை உங்கள் கண்களுக்கு உடனடியாக தீர்க்கமான தன்மையை அளித்து, உங்கள் கண் இமைகள் புத்துணர்ச்சியுடன் இருக்க வழி செய்கிறது. எப்போது உங்கள் கண்களை மெருகேற்ற மஸ்காரா தேவைப்படும் என்று தெரியாது என்பதால், அதை எப்போதும் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. மேலும், சுருளான மைகள் தேவை எனில், லாக்மே கர்லிங் மஸ்காராவை முயற்சிக்கவும். அதே போல இமைகளை நீளமாக தோன்ற வைக்க விரும்பினால் தி லாக்மே பிளட்டர் சீக்ரெட்ஸ் டிராமட்டிக் ஐஸ் மஸ்காரா ஏற்றதாக இருக்கும்.

லிப்ஸ்டிக்

வாய்ப்புள்ள போதெல்லாம் உங்கள் கைப்பையில், ஒரு சில ஷேட் லிப்ஸ்டிக்குகளை வைத்திருக்கவும். 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒரு முறை லிப்ஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டியிருக்கலாம். மனநிலை அல்லது சூழலுக்கு ஏற்ப பொருத்தமான ஷேடை பயன்படுத்தலாம். எப்போது எந்த வண்ண லிப்ஸ்டிக் தேவை என சொல்ல முடியாது. கைவசம் சில வண்ணங்களை வைத்திருக்க வேண்டும்.

Tags:    

Similar News