அழகுக் குறிப்புகள்
null

டீன்-ஏஜ் பருவமும், பேஷன் ஆசையும்...

Published On 2024-09-28 06:08 GMT   |   Update On 2024-09-28 07:30 GMT
  • ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும்.
  • தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

டீன்-ஏஜ் காலம் என்பது தனிப்பட்ட முறையில் உடல் வளர்ச்சி மற்றும் மனமாற்றம் நிறைந்த காலகட்டம். தனித்துவமான பேஷன் ஸ்டைலை கண்டறிந்து வெளிப்படுத்த இளைஞர்கள் விரும்புகிறார்கள். இந்தப் பதிவில் டீன் ஏஜ் வயதினருக்கான சில பேஷன் டிப்ஸ் பற்றி பார்க்கலாம்.

* தனித்துவமான ஸ்டைல்:

டிரெண்டுகளை பின்பற்றுவது நல்லதுதான். ஆனால் உங்களுக்குப் பிடித்தமான, உங்களுக்கு நன்றாக பொருந்தக்கூடிய ஸ்டைலை கண்டறிவது முக்கியம். பல்வேறு ஸ்டைல்களை முயற்சி செய்து உங்களுக்கு எது பிடித்துள்ளது, எது நன்றாக இருக்கிறது என்பதை முயற்சித்து பார்த்து சரியாக தேர்ந்தெடுங்கள்.

* உடலுக்கு ஏற்ற உடைகள்:

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் அமைப்பு உண்டு. அதற்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் தோற்றத்தை சிறப்பாக மேம்படுத்தலாம். ஒல்லியாக இருந்தால் கொஞ்சம் தளர்வான ஆடைகளை தேர்ந்தெடுக்கவும். நடுத்தர உடல்வாகு கொண்டவர்கள் உடலுடன் ஒட்டி இருக்கும் வகையில் உடை அணிவது நல்லது. இதுவே குண்டாக இருந்தால், அதிக தளர்வாக இல்லாமல் உங்களை ஒல்லியாக காட்டும்படியான உடைகளை தேர்வு செய்யவும்.

* தரமான ஆடை:

ஆடை விஷயத்தில் எப்போதும் மலிவை நோக்கி செல்லக்கூடாது. உயர்தர ஆடைகள் உங்களை மற்றவர்கள் மத்தியில் சிறப்பாக காண்பிக்க உதவும். சில நேரங்களில் உயர்தர ஆடைகளை வாங்குவது அதிக மலிவான ஆடைகளை வாங்குவதை விட சிறந்தது. தரமான ஆடைகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், விலைக்கு முக்கியத்துவம் தராமல், தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

* கூடுதல் உபகரணங்கள்:

ஆக்சஸரிஸ் எனப்படும் கூடுதல் அழகு உபகரணங்கள் உங்கள் ஸ்டைலுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்க சிறந்த வழியாகும். நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள், தொப்பிகள், கூலிங் கண்ணாடிகள் மற்றும் பைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இவை உங்களது தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

Tags:    

Similar News