அழகான கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனிங் டிப்ஸ்...
- கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
- எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள் கண்டிஷனரை தவிர்ப்பது நல்லது.
கண்டிஷனர் என்பது நம் கூந்தலை எண்ணெய் தன்மையுடன் வைத்து வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் பசை இல்லாத கூந்தலின் பகுதிகளில் மட்டும் கண்டிஷனரை பயன்படுத்தினால் மட்டும் போதும்.
அதிக எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், அல்லது பொடுகு பிரச்சினை உள்ளவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள் கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
கண்டிஷனர் வாங்கும் போது உங்களது கூந்தலின் உறுதித்தன்மையை மனதில் வைத்து டிபாட்மெண்ட் ஸ்டோர்களிலோ அல்லது காஸ்மெடிக் கடைகளில் வாங்குவது நல்லது.
அவகேடோ பழத்தின் சதை பகுதியை ஷாம்பு பயன்படுத்தி குளித்த பிறகு கூந்தலில் மட்டும் படும்படி தேய்த்து 5 நிமிடம் கழித்து குளித்து வந்தால் கூந்தலுக்கு நல்ல ரிசல்ட் இருக்கும்.
பூந்திக்கொட்டையை எடுத்து குளிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னரே எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பூந்திக்கொட்டை ஊறவைத்த தண்ணீரை ஒவ்வொருமுறை ஷாம்பு வாஷிற்கு பிறகும் கூந்தலை இந்த தண்ணீரில் அலசி வர வேண்டும். இது இயற்கையாகவே கண்டிஷனர் போல் உங்களது கூந்தலை பாதுகாக்கும்.
ஒரு ஸ்பூன் வினிகரை கால் கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த தண்ணீரையும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு இந்த வினிகர் கலந்த தண்ணீரில் கூந்தலை அலச வேண்டும். இவ்வாறு செய்யும் போது கூந்தலை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.