முடி கொத்துகொத்தாக கொட்டுதா? இதை தேய்த்து குளித்து பாருங்கள்
- கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும்.
- சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும்.
கூந்தலுக்குப் போஷாக்கு தரும் சீயக்காய் தூளை வீட்டிலேயே இயற்கை செய்வது எப்படி என்பது குறித்து இங்கு பார்க்கலாம். கூந்தல் பிரச்னை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரலாம். சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்னைகளும் தீரும்.
தேவையான பொருட்கள்:
சீயக்காய்-1 கிலோ
வெந்தயம்- 100 கிராம்
பாசிபயறு- 200 கிராம்
பூந்திகொட்டை-100 கிராம்
நெல்லிக்காய் (காய்ந்தது)- 50 கிராம்
ஆவரம்பூ- 50 கிராம்
செம்பருத்தி பூ- 20 பூ
நாட்டு பன்னீர் ரோஜா- 20 பூ
வெட்டிவேர்- 25 கிராம்
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் கொடுத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடி நன்றாக ஆறியதும், அதனை ஒரு டப்பாவில் போட்டு உபயோகப்படுத்திக்கொள்ளலாம். ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப்போகாது. தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தலைக்கு குளிக்கும் முன்னர் தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து சீயக்காய் குழைத்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் கூந்தல் மிருதுவாக இருக்கும். ஒவ்வொரு எண்ணெய் குளியளின் போதும் இந்த சீயக்காய் பொடியை பயன்படுத்தி பலன் பெறலாம். இந்த பொடி முடியை வளரச்செய்வது மட்டுமல்லாமல், பொடுகுத்தொல்லை, உடல் உஷ்ணம், முடி கொட்டும் பிரச்சினை, நரை முடி மற்றும் கூந்தலுக்கு வலுசேர்க்கும் வகையிலும் இது நமக்கு உதவியாக இருக்கும். செய்து பாருங்கள்.
சீயக்காய் தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
கூந்தல் பிரச்சனை இருப்பவர்கள் வாரம் இருமுறை சீயக்காய் தூள் போட்டு தலைக்கு குளித்து வரலாம்.
சீயக்காயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு, அரிப்பு போன்ற கூந்தல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
கூந்தலுக்கு ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக சீயக்காய் செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது.
சீயக்காயில் பி.எச். அளவு குறைவாக இருக்கும். இதனை பயன்படுத்தும் போது உங்கள் கூந்தல் மிருதுவாக மாறும், கூந்தலை வறட்சியாக்காது.
சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது இயற்கையிலே முடியை மென்மையாக்கும் குணம் கொண்டது.