அழகுக் குறிப்புகள்

சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவது எப்படி?

Published On 2023-08-31 06:33 GMT   |   Update On 2023-08-31 06:33 GMT
  • வெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன் ஏற்படும்.
  • கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அறிவோம்.

சன்ஸ்கிரீன் லோஷன் என்பது சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை நீக்க பயன்படுகிறது. பணிகள்காரணமாக சூரியவெளியில் சுற்றும் வேலை உள்ளவர்கள் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயப்படுத்த வேண்டும். அவ்வாறுவெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன், தோல் உறிந்து வருவது போன்றவை ஏற்படும்.

சன்ஸ்கிரீன் இரண்டு வகைகளில் உள்ளன. ஒரு பிசிக்கல் சன்ஸ்கிரீன், மற்றொன்று கெமிக்கல் சன்ஸ்கிரீன். பிசிக்கல்சன்ஸ்கீர்னில் உள்ள மாலிக்கியூவில் சூரியஒளியினால் ஏற்படும் தாக்கத்தை உடனடியாக வெளியேற்றுகிறது. இந்த பிசிக்கல் சன்ஸ்கிரீனில் அவன் ஆக்சைடு, டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் சின்க் ஆசைடு உள்ளது.

நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். அதுமட்டுமல்லாமல் யூவி கதிர்களுக்கு எதிரான இந்த பாதுகாப்பு அடுக்கை பராமரிக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த பல நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

இதுவே மழைக்காலம் என்று வரும் பொழுது சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆஃப்டர் சன்கேர் என்று சொல்லப்படும் சூரிய வெளிச்சத்திற்கு நமது சருமத்தை வெளிப்படுத்திய பிறகு சன் ஸ்கிரீன் மட்டுமே போதுமானதாக இருக்காது.

வானிலையை துளியும் பொருட்படுத்தாமல் சூரியனானது நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்களை ஆண்டு முழுவதும் தொடர்ந்து வெளியிடுகிறது. சூரிய கதிர்களால் நமது சருமம் சன்பர்ன் அல்லது வறண்ட சருமம் உருவாகலாம். இது      நீண்ட காலத்திற்கு நிகழும் பொழுது முன்கூட்டிய வயதான அறிகுறிகள் முதல் சரும புற்றுநோய் வரை ஏராளமான ஆபத்துக்களை உண்டாக்கும்.

வழக்கமான எஸ்பிஎப் பயன்படுத்துவது இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பாதுகாப்பை மட்டுமே வழங்கக்கூடியது. 90  சதவீத முன்கூட்டிய வயதான அறிகுறிகள் சூரியனின் விளைவுகளால் ஏற்படுபவை தான்! எனவே வீட்டை விட்டு வெளியேசென்று வீடு திரும்பிய பிறகு சருமத்திற்கு தேவையான பராமரிப்பை வழங்குவது மிகவும் அவசியம். இந்த காரணத்தை பூர்த்திசெய்யும் வகையில் ஏராளமான புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

நீங்கள் எவ்வளவு நேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சருமத்திற்கு பொருந்தக்கூடிய சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது தவிர வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களும் உள்ளன.

மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்தி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவது அவசியம். சன்ஸ்கிரீனுடன் வைட்டமின்சி பயன்படுத்துவது சூரிய கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது. சிறந்த ஆன்டிஆக்சிடென்டாக செயல்படுவதன் மூலம் வைட்டமின் சி யூவி கதிர்களால் உருவாக்கப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது. ஆகவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு வைட்டமின் சி சார்ந்த சீரம் பயன்படுத்துவது உங்கள்

சருமத்தில் பல அதிசயங்களை செய்யக்கூடும். எனவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மட்டுமே உங்கள் சருமத்தை பாதுகாக்க போதாது. கூடுதலாக 5 நிமிடங்கள் செலவு செய்வதால் உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் என்றும் இளமையாகவும் பார்த்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News