ஆடவர் சட்டைகளில் முக்கியமான பேட்டர்ன்கள்
- வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.
- ராயல் லுக் தரும் கிளன் பிளைட் பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.
ஆண்கள் அணிகின்ற சட்டையில் இடம் பெறும் பேட்டர்ன்கள் என்பது தனிசிறப்பு கொண்டவை. அதில் ஒவ்வொரு பேட்டர்ன்களும் ஒவ்வொரு விதமாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த பேட்டர்ன்கள் என்பது பிரபலமானதாக மாறிவிட்ட பிறகு அதற்கென தனித்துவம் ஏற்பட்டு விடுகிறது. உலகமெங்கும் சட்டை உற்பத்தியாளர்கள் இந்த பேட்டர்ன்களில் ஏதேனும் ஒன்றை கொண்டே சட்டையை உருவாக்கி தருகின்றனர். அதுபோல் மிக முக்கியமான சட்டை பேட்டர்ன்களை அடிப்படையாக கொண்டே விதவிதமான வண்ணக் கலவையுடன் சட்டைகள் உலா வருகின்றன.
பிரபலமான சட்டை பேட்டர்ன்கள்
உலகெங்கும் பிரபலமான சட்டை பேட்டர்ன்கள் என்றவாறு பல உள்ளன. அவை ஜின்கெம், மெட்ராஸ், டார்டன் பிளைட், ஷெப்பர்ட செக், ஹவுண்ட்ஸ் டூத், கிளன் பிளைட், விண்டோ பேன் செக், கிராப் செக், டாட்டர்ஸ் சால், மினி செக், பின் செக், அவனிங் ஸ்டிரிப், பெங்கால் ஸ்டிரிப்ஸ், கேண்டி ஸ்டிரிப்ஸ், பென்சில் ஸ்டிரிப், ஹேர்லைன் ஸ்டிரிப், பார்கோடு, ஷேடோ போன்றவாறு பல பேட்டர்ன்கள் உள்ளன.
ஜின்கெம் பேட்டர்ன்
ஜின்கெம் என்பது பொதுவாக கட்டம் உள்ளவாறு உருவாக்கப்படுகிறது. வெள்ளை மற்றும் வண்ணம் இணைந்தவாறு பெரும்பாலும் சதுர கட்டங்கள் பெரிய அளவில் உள்ளவாறு இதன் வடிவம் இருக்கும். நீளம் மற்றும் குறுக்குவாட்டில் பட்டை கோடுகள் என்பது இரட்டை வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்படும்போது சதுரமான கட்டம் போன்று காட்சியளிக்கும். நீளவாக்கில் 17-ம் நூற்றாண்டில் அறிமுகமான ஜின்கெம் பேட்டர்ன் என்பது 18-ம் நுற்றாண்டில் கட்டம் வடிவத்தில் உருவாக்கப்பட்டன. வெள்ளை மற்றும் நீலப் பின்னணி கொண்ட இந்த பேட்டர்ன் சட்டைகள் அதிக பிரபலமானதாக உள்ளது.
மெட்ராஸ் பேட்டர்ன்
கோடை காலத்தில் அணிய ஏற்றவாறு இந்தியாவில் கிழக்கிந்திய நிறுவனத்தினர் உருவாக்கிய பேட்டர்ன் தான் மெட்ராஸ். வண்ணமயமான கோடுகள் மற்றும் கட்டங்கள் உள்ளவாறு ஒரே சீரான இல்லாத மாறுபட்ட அளவுகளில் காணப்படும். மெட்ராஸ் பேட்டர்ன் கேஷ்வல் சட்டைகளாகவும், அரைகால் சட்டைகளாகவும் அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.
கிளன் பிளைட்
கிளன் பிளைட் என்பது வேல்ஸ் ராஜா கட்டம் என்றவாறு அழைக்கப்படுகிறது. இந்த பேட்டர்ன் பெரும்பாலும் சூட் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இரட்டை சாயல் கொண்ட வெட்டுப்பட்ட கட்டங்கள் கொண்டவாறு இருக்கும். அதுபோல் டார்க் மற்றும் லைட் வண்ண கோடுகள் மாற்றி மாற்றி உள்ளது போன்ற பேட்டர்ன் அமைப்பு. ராயல் லுக் தரும் இந்த பேட்டர்ன் அதிகளவில் விரும்பி அணியப்படுகிறது.
அவனிங் ஸ்டிரிப்ஸ்
அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது அகலமான வடிவில் நீள கோடுகள் உள்ளது போன்று இருப்பது. வெள்ளை பின்னணியில் டார்க் மற்றும் லைட் வண்ண பட்டை கோடுகள் வருவது இதன் சிறப்பு அதாவது ¼ இன்ச் அளவிற்கு இந்த பட்டை கோடு உள்ளவாறு சீரான இடைவெளி அமைப்புடன் இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் பேட்டர்ன் உள்ளது. இந்த அவனிங் ஸ்டிரிப்ஸ் என்பது கேஸ்வல் ஆடை வடிவமைப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பென்சில் ஸ்டிரிப்ஸ்
பென்சில் அளவுள்ள சிறிய கோடுகள் உள்ள அமைப்பு. சீரான இடைவெளியின்றி வரிசைகிரமமாக கோடுகள் நீளவாக்கில் இருப்பது இதன் அமைப்பு. இதுவும் வெள்ளை நிற பின்னணியில் வண்ண கோடுகள் நீளவாக்கில் வரும்.
ஷேடோ ஸ்டிரிப்ஸ்
ஷேடோ ஸ்டிரிப்ஸ் என்பது நீளவாக்கில் கோடுகள் போல அமைந்திருக்கும். ஒரு வண்ணத்திற்கு மற்றது மார்டன் போல காட்சியளிக்கும். மேலும் ஏதேனும் வண்ணக்கோடுக்கு ஏற்ப அதே வண்ண சாயல் பரவியுள்ளவாறு தோன்ற செய்யப்படும். பெரும்பாலும் மூன்று (அ) இரட்டை வண்ண சாயல் பின்னணியில் இந்த பேட்டர்ன் உருவாக்கம் அமைகிறது.
ஹியரிங் போன்
மேல் மற்றும் கீழ் நோக்கி 'க்ஷி' வடிவில் இந்த பேட்டர்ன் வடிவமைக்கப்பட்டிருக்கும். மீனின் உள்முள் வடிவில் உள்ள இந்த பேட்டர்ன் சூட் மற்றும் வெளிநிகழ்வு ஆடைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நாம் அணிகின்ற சட்டைகள் எந்த வகையான பேட்டர்ன் என்பதை அறிந்து அணியும்போது அதன் சிறப்பும் பெருமையும் அறிய முடியும்.