நரை முடி கருப்பாக இயற்கை சாயம் (ஹேர் டை)
- கூந்தலுக்கு செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும்.
- இதை தவிர்க்க நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரிக்கலாம்.
வயதாகும் போதும், சில சத்துக்கள் குறைபாடு மற்றும் பரம்பரை அறிகுறிகள் காரணமாகவும் தலைமுடி நரைப்பதுண்டு. இதற்கு சந்தையில் கிடைக்கும் தைலங்கள், பவுடர்களில் ரசாயனம் கலந்திருக்கும். இது பலருக்கு தோல் அலர்ஜி மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ரசாயனம் கலந்த செயற்கை சாயம் பூசும் போது முகம் கருத்துப்போகும். இதை தவிர்த்து நீங்கள் வீட்டிலேயே இயற்கை சாயம் தயாரித்து நரை முடியில் பூசி கருப்பாக மாற்றலாம்.
தேவையான பொருட்கள்:
அவுரி இலை சாறு, கறிவேப்பிலை சாறு, மருதோன்றி இலை சாறு, பீட்ரூட் சாறு, தேயிலை டிக்காஷன் போன்றவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 5 முதல் 10 செம்பருத்தி பூவை அரைத்து கலந்து கொள்ளுங்கள். இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து தண்ணீர் வற்றும்வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். களிம்பு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைக்கவும். பின்னர் தேவையான அளவு எடுத்து தலைமுடியில் நன்றாக தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் தோறும் செய்து வந்தால் நரை முடி நிறம் மாறும், இதனால் உடல் சூடும் குறையும், கண்கள் குளிர்ச்சி பெறும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499