உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் எண்ணெய் குளியல்!
- உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
- ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.
உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று மரபு மருத்துவம் முதல் நவீன மருத்துவம் வரை கூறுகின்றன. இதனை நன்கு அறிந்துதான் எண்ணெய் குளியல் என்ற வழக்கத்தை நம் முன்னோர் உருவாக்கி வைத்தனர்.
பொதுவாக, வாரம் இருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் ஏற்படும் பலன்கள் குறித்து பாரம்பரிய மருத்துவம் கூறும் பலன்களை காணலாம்.
உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. செரிமானத்தை சரி செய்கிறது. இனப்பெருக்க உறுப்புகளின் அதீத சூட்டை தணித்து ஆண்மை குறைபாட்டை சரி செய்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.
தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகிய பாதிப்பு ஏற்படுகிறது. எண்ணெய் குளியல் இந்த பிரச்சினைகளை சரிசெய்கிறது.
கவலை, மன உளைச்சல், துக்கம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, ஏமாற்றம், விரக்தி போன்ற உணர்வுகள் உடலில் பித்த அமில நிலையை அதிகரிக்கிறது.
எண்ணெய் உடலின் சூட்டை சமநிலைக்கு கொண்டு வருவதால் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணர்ச்சிகள், கொதிப்பு நிலை குறைகிறது.
உமிழ் நீர், எச்சில், நிணநீர், கணைய நீர் (இன்சுலின்), சளி, கோழை, சிறுநீர், விந்து, மாத விடாய், வெள்ளைப்படுதல், வியர்வை ஆகியவற்றை சரியான அளவில் வைத்து உடலை பராமரிக்கிறது.
வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய்க் குளியல் எடுப்பது நல்லது.