அழகுக் குறிப்புகள்

முகத்தை பளபளப்பாக்கும் ரோஸ் ஸ்கிரப்

Published On 2023-04-06 05:43 GMT   |   Update On 2023-04-06 05:43 GMT
  • சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது
  • கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை குறைக்கிறது.

நமது சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் காட்டுவதற்கு நாம் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகளும் நமது சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சருமத்தை அழகாக பராமரிக்க, இன்று ரோஜா பூவால் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரப் பற்றி பார்க்கவிருக்கிறோம், இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நல்ல பளபளப்பைக் கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ரோஜா பூ - 1 கப்(உலர்ந்தது )

பொடித்த சர்க்கரை- 1 டீஸ்பூன்

தேன் - 2 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்

தண்ணீர் - 1 டீஸ்பூன்

முதலில் உலர்ந்த ரோஜா இதழ்களை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ரோஜா, பொடித்த சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து பின் முகத்தில் 10 நிமிடம் விடவும்.

10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். உங்கள் முகம் அழகிய பூ போல மலந்திருப்பதை பார்க்க முடியும்.

ரோஸ் வாட்டர் அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். இது நமது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தையும் குறைக்கிறது. தினமும் இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்திற்குப் புதிய பொலிவைத் தரும்.

Tags:    

Similar News