அழகுக் குறிப்புகள்
null

நரைமுடிக்கு ஹேர் டை அடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்?

Published On 2024-09-01 03:10 GMT   |   Update On 2024-09-06 12:40 GMT
  • தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது சகஜமாகிவிட்டது.
  • பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள்.

நாகரிகம் என்ற பெயரில் 16 வயதிலிருந்தே ஆணும்-பெண்ணும் தங்கள் தலைமுடியில் கலர்கலரான டைகளை அடித்துக் கொள்வது என்பது உலகம் முழுவதும் சகஜமாகிவிட்டது.

நம் நாட்டில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஹேர் டை உபயோகிக்கிறார்கள். அதிலும் நரைத்த வெள்ளை முடியை கறுப்பாக ஆக்குவதற்கு தான் இதை பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலான ஹேர் டைகளில் `பேராபினைலின் டை அமைன்' (பி.பி.டி) என்கிற ரசாயனப் பொருள் உள்ளது. இது சருமத்தில் எரிச்சல், அலர்ஜி போன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.


இந்த ரசாயனப் பொருள் தோலில் படும் இடம் எரிச்சலடைந்து சிவந்து வீக்கமடைந்து தடித்துப் போவதுண்டு.

ஹேர் டை உபயோகிக்க ஆரம்பிப்பதற்கு முன் சிறிதளவு ஹேர் டை கலவையை உங்கள் காதுக்கு பின்புறமோ அல்லது உங்கள் முழங்கையின் பின் பக்கமோ லேசாகத் தடவி கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்.

பின்னர் தடவிய இடத்தில் தோலில் நிறமாற்றம், அரிப்பு, எரிச்சல் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். ஒன்றும் ஏற்படவில்லை என்று தெரிந்த பின்பு ஹேர் டையை தலைமுடியில் உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

தலைமுடிக்குத் தானே டை அடிக்கிறோம். அலர்ஜி ஏற்பட்டாலும் தலையில் இருக்கும் தோலோடு போய்விடும் என்று நினைக்காதீர்கள்.


சிலருக்கு இந்த பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கழுத்து, முன்னந்தலை, நெற்றி, காதுகள், கண் இமைகள் உச்சந்தலை ஆகிய இடங்களுக்கெல்லாம் பரவ ஆரம்பித்துவிடும்.

சில ஹேர்டை உபயோகித்த அடுத்த ஒரு நிமிட நேரத்திற்குள்ளேயே பாதிப்பைக் காட்டிவிடும். சிலருக்கு மூச்சுத்திணறல், வாந்தி ஏற்படலாம்.

ஹேர் டை அடித்துவிட்டு அதிக நேரம் தலையை காயவிடாதீர்கள். தலைமுடியை பலமுறை நன்றாக அலசி கழுவி உலர்த்துங்கள். பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். சுய மருத்துவம் கூடாது.

எப்பொழுது நீங்கள் தாத்தா அல்லது பாட்டி ஆகிவிட்டீர்களோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது அனுபவம் சொல்வது.

எப்பொழுது உங்கள் உடலுக்கு, தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறதோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது மருத்துவம் சொல்வது.

எப்பொழுது உங்கள் வயதுக்கும், தோற்றத்துக்கும் ஒத்துவரவில்லையோ அப்பொழுது நீங்கள் ஹேர் டை அடிப்பதை நிறுத்திவிட வேண்டும்-இது சமுதாயம் சொல்வது.


தோற்றத்தைப் பார்த்தால் 60 வயதுக்கு மேல் தோன்றுகிறது. ஆனால் இன்னமும் ஹேர் டை அடிப்பதை நிறுத்தவில்லையே என்று பிறர் சொல்லக்கூடாது. உங்கள் வயதோடும் உங்கள் உடல் அமைப்போடும் ஹேர் டை ஒத்துப் போகவேண்டும். அவ்வளவுதான்.

Tags:    

Similar News